Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜனவரி 16 , மு.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்
கிண்ணியா மாபிள் கடலில் ஞாயிற்றுக்கிழமை (19) நீராடிய இளைஞர் ஒருவர், அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கிண்ணியா, மகரூப் கிராமத்தைச் சேர்ந்த ரகுமத்துல்லா ரஜாய் (வயது 19) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
இந்த இளைஞர் நீராடிக்கொண்டிருந்தபோது, கடலில் பாரிய அலை ஏற்பட்டதைத் தொடர்ந்து காணாமல் போனார். இதன் பின்னர், கடற்படையினரின் உதவியுடன் இந்த இளைஞரைத் தேடிய வேளையில் அலையில் அடிபட்டு இந்த இளைஞர் கரைசேர்ந்துள்ளார்.
இவரைக் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதித்தபோதும், சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் கூறினார்.
இது தொடர்பான விசாரணையைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago