2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஆங்கில உயர் தேசிய டிப்ளோமாதாரிகள் ஆர்ப்பாட்டம்

Thipaan   / 2016 ஒக்டோபர் 27 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், பொன் ஆனந்தம், வடமலை ராஜ்குமார்

ஏனைய மாகாணங்களைப்போல, நேர்முகப்பரீட்சை மூலம் தங்களையும் தெரிவுசெய்து ஆசிரியர் நியமனங்களை வழங்குமாறு கோரி, ஆங்கில உயர் தேசிய  டிப்ளோமாதாரிகள் (HNDE), கிழக்கு மாகாண சபைக்கு முன்னால், இன்று வியாழக்கிழமை (27) காலை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஆர்பாட்டக்கார்கள், திருகோணமலையில் 50 பட்டதாரிகள் உள்ளோம். ஆனால், 156 தமிழ் பாடசாலைகளில், ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

ஏனைய மாகாணங்கள், தமது மாகாணத்தில் உள்ள டிப்ளோமாதாரிகளுக்கான நேர்கமுப் பரீட்சையை நடாத்தி நியமனங்கள் வழங்குகின்றன. ஆயினும், கிழக்கு மாகாணத்தில் அவ்வாறு நடைமுறைப்படுத்தப்படாமல், ஏனைய மாகாணங்களுக்கும் சேர்த்து விண்ணப்பம் கோரியதனால் இங்கு இவ்வாறாதோர் இழுபறி நிலை நிலவுகிறது.

எனவே, கிழக்கு மாகாணத்தில் உள்ள 250 ஆங்கில உயர் தேசிய டிப்ளோமா பட்டதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சையை நடாத்தி, தமக்கான நியமனங்களை வழங்கவேண்டும் என, அவர்கள் கோரினர்.

கிழக்கு மாகாண சபை அமர்வுக்கு வருகை தந்த மட்டக்களப்பு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் கலந்துரையாடியதுடன், முதலமைச்சர், மாகாண அமைச்சர்களுடன் பேசி சிறந்த தீர்வினை பெற்று தருவதாகவும் வாக்குறுதியளித்தார்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .