Suganthini Ratnam / 2017 ஜனவரி 16 , மு.ப. 06:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பொன் ஆனந்தம், அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை -கண்டி பிரதான வீதியை அண்டி அமைந்துள்ள தர்மராஜா வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி அவ்வித்தியாலய மாணவர்களும் பெற்றோரும் இன்று (16) ஆர்;ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவிக்கையில்,'வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து வருகின்ற சுமார் 135 மாணவர்கள் இவ்வித்தியாலயத்தில் கல்வி பயின்று வருகின்றனர்.
தற்போது இவ்வித்தியாலயத்தில் 9 ஆசிரியர்கள் உள்ளனர். மேலும், 6 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள், 2015ஆம் ஆண்டு முதல்; நிலவுகின்றன. இருப்பினும், இதுவரையில் அவ்வெற்றிடங்கள் நிரப்பப்படவில்லை.
இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியும் இதுவரையில் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை' என்றனர்.
1 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
21 Dec 2025