அப்துல்சலாம் யாசீம் / 2018 ஜனவரி 28 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை கோணேஸ்வரர் இந்து ஆலயத்தை தரமுயர்த்தி ஆசியாவின் தலைச் சிறந்த இந்து வணக்கஸ்தலமாக தரமுயர்த்துவது தொடர்பில் ஆராய்வதற்காக, புதுடில்லியிலிருந்து முதலீட்டாளர்கள் குழுவொன்று விசேட விமானம் மூலம் திருகோணமலைக்கு நேற்று (27) விஜயம் செய்தனர்.
கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் வழிகாட்டலில், ஆசியாவின் தலை சிறந்த இந்து வணக்கஸ்தலமாக திருகோணமலை கோணேஸ்வரர் ஆலயத்தை தரமுயர்த்தி, யாத்திரிகர்களுக்கான உட்கட்டுமான வசதிகளை அதிகரித்து, இந்தியா மற்றும் பல நாடுகளிலிருந்தும் யாத்திரிகர்கள் எமது நாட்டிற்கு வருவதை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தின் ஓர் அங்கமாக இந்தியா புதுடில்லியைச் சேர்ந்த திரு.உதய தேஷாய் மற்றும் பிரவீன் அக்றவால் உட்பட 14 பேர் கொண்ட குழுவினர் விசேட விமானம் மூலம் திருகோணமலை சீனக்குடா விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இக்குழுவினர் திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் விசேட வழிபாடுகளில் கலந்துக் கொண்டதோடு, இவ்வாலயத்தினை உலகளாவிய ரீதியில் வசிக்கும் இந்துக்களின் வணக்கஸ்தலமாக மேம்படுத்துவது குறித்தும் ஆராய்ந்தனர்.
அத்துடன் இக்குழுவினர் திருகோணமலையில் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய பிரதேசங்களை பார்வையிட்டதுடன், இம்மாவட்டத்தின் முதலீடுகளை மேற்கொள்வது குறித்தும் ஆராய்ந்தனர்.
இதில், கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக அதிகாரிகள் கிழக்கு மாகாண சுற்றுலாப்பணியக அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.



16 minute ago
28 minute ago
33 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
28 minute ago
33 minute ago
41 minute ago