R.Maheshwary / 2021 ஏப்ரல் 18 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா
கிழக்கு மாகாணத்துக்கான வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்கள் யாவும் எதிர்வரும் மே மாதம் 17ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படும் என மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.அப்துல் நிசாம் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;
தற்போது புனித றமழான் நோன்புக்காக முஸ்லிம் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தமிழ் பாடசாலைகள் இம்மாதம் 19ஆம் திகதி ஆரம்பமாகிறன. இந்நிலையில் தமிழ் பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள், முஸ்லிம் பாடசாலைகளில் விடுமுறை காலத்தில் கடமையேற்க முடியாத சூழ்நிலை காணப்படுகிறது.
முஸ்லிம் பாடசாலைகளில் இருந்து தமிழ் பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்படுவோர், முஸ்லிம் பாடசாலைகளில் தற்போது அனுபவிக்கின்ற புனித நோன்பு கால விடுமுறையை அனுபவிக்க முடியாமல் போய்விடும்.
எனவே, இவற்றைக் கருத்தில் கொண்டு இரு வகைப் பாடசாலைகளுக்கும் பொதுவாக மே மாதம் 17 ஆம் திகதி தொடக்கம் இந்த ஆசிரியர் இடமாற்றங்களை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது- என்றார்.
இவ்விடமாற்றங்கள் இம்மாதம் 19 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என மாகாண கல்வி அமைச்சினால் முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
13 May 2026
13 May 2026
13 May 2026
13 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 May 2026
13 May 2026
13 May 2026
13 May 2026