Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 13 , பி.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், ஹஸ்பர் ஏ ஹலீம், எப்.முபாரக்
பதவிசிறிபுர, திஸ்ஸபுர 11 மற்றும் 12 மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி, கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு முன்னால் இன்று (13) பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
500 மாணவர்கள் கல்வி பயிலும் இப்பாடசாலையில், ஆசிரியர் வெற்றிடங்கள் 28ஆகவுள்ள நிலையில், 18 ஆசிரியர்கள் மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளனர் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பெற்றோர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து, கிழக்கு மாகாண கல்வியமைச்சுக்கும் அமைச்சின் செயலாளருக்கும் பல தடவைகள் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் பெற்றோர்கள் விசனம் தெரிவித்தனர்.
இப்போராட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
13 minute ago
17 minute ago
23 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
17 minute ago
23 minute ago
43 minute ago