2026 மார்ச் 23, திங்கட்கிழமை

ஆடுகளைத் திருடி விற்பனை செய்து வந்தவருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்

திருகோணமலை, தோப்பூர் பிரதேசத்தில் 24 ஆடுகளைத் திருடி விற்பனை செய்து வந்த நபரொருவரை, மார்ச் மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் ஐ.என். றிஸ்வான், நேற்று வியாழக்கிழமை (25) உத்தரவிட்டார்.
 
தோப்பூர், முன்னம்போடிவெட்டைப் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் தோப்பூர், மூதூர் மற்றும் சேருவில போன்ற பிரதேசங்களில் 24 ஆடுகளைத் திருடி விற்பனை செய்துள்ளதாக சேருநுவரக் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபருக்கெதிராக ஆடுகளைத் திருடி விற்பனை செய்து வந்த குற்றஞ்சாட்டு வழக்குகள் ஐந்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் சேருநுவரப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரை பொலிஸார் மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் நேற்று (25) ஆஜர்படுத்திய போது விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தராவிட்டார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவரப் பொலிஸிர் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .