Princiya Dixci / 2021 மே 04 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், தீஷான் அஹமட், ஏ.எம்..ஏ.பரீட், எப்.முபாரக்
மூதூரில் ஆற்றில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்ட 16 வயது இளைஞன் ஒருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
ஜின்னா நகர், மூதூர் - 02 ஐ சேர்ந்த க.பொ.த சாதாரண தர மாணவன் நஜீப் அதீப் என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
இம்மாணவன் அவரது நண்பர்களுடன் ஆலிம்சேனை எனப்படும் இடத்திலுள்ள ஆற்றில் நேற்று (03) மாலை குளிக்கச் சென்றவேளை நீரில் மூழ்கியுள்ளார்.
பின்னர் அவ்விடத்தில் இருந்த பொதுமக்களின் உதவியுடன் அவர் காப்பாற்றப்பட்டு, மூதூர் வைத்தியசாலைக்கு சேர்க்கப்பட்டும் சிகிச்சை பலனில்லாமல் மரணமடைந்துள்ளதாக மரண விசாரணை அதிகாரி எம்.வை.எம்.லாபிர் தெரிவித்தார்.
மாணவனின் உடலை மரண விசாரணை அதிகாரியின் அறிக்கையின் பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, மேற்படி குளத்தில் குளிப்பதைத் தடை விதிக்க வேண்டுமென, பிரதேச சபைத் தவிசாளரிடம் வேண்டுகோளையும் மரண விசாரணை அதிகாரி முன்வைத்துள்ளார்.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026