ஒலுமுதீன் கியாஸ் / 2018 ஜனவரி 25 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூதூர் , சேருநுவர பிரதேசத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் ஆற்று மண் ஏற்றிய மூவருக்கு, தலா 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, மூதூர் நீதவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் உத்தரவிட்டார்.
குறித்த சந்தேகநபர்களை, மூன்று உழவு இயந்திரங்களோடு, சேருநுவர பொலிஸார், நேற்று முன்தினம் (23) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
சந்தேகநபர்கள் மூவரும் நேற்றைய தினம் (24) தலா 10 ஆயிரம் ரூபாயைச் செலுத்தினர். மீதி 50 ஆயிரம் ரூபாயை, பெப்ரவரி மாதம் 27ஆம் திகதிக்குள் செலுத்துமாறு, நீதிபதி பணித்தார்.
மணல், அரச உடமையாக்கப்பட்டதோடு, வாகனங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
9 minute ago
22 minute ago
25 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
22 minute ago
25 minute ago
39 minute ago