Gavitha / 2017 மார்ச் 02 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தீஷான் அஹமட்
கிண்ணியா பிரதேசத்தில் தற்போது ஏற்பட்டுள்ள டெங்கு அபாயத்தினை கவனத்தில் கொண்டு கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணாண்டோ மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் ஆகியோர் இன்று வியாழக்கிழமை அவசர விஜயமொன்றினை மேற்கொண்டு கிண்ணியா தள வைத்தியசாலையில் அவசர கூட்டமொன்றினை கூட்டியுள்ளனர்.
கிண்ணியா பிரதேசத்தில், 1,000க்கு மேற்பட்டோர் டெங்கு பாதிப்புக்குள்ளாகியுள்ளதோடு 05 பேர் மரணித்தும் உள்ளனர்.
டெங்கு வேகமாக பரவி வருவதையிட்டு வேதனையடைகின்றேன், சுகாதார அமைச்சரும் இங்கு இருக்கின்றார் தேவையானளவு வைத்தியர்களையும், தாதி உத்தியோகத்தர்களையும், ஊழியர்களையும் முழுமையாக பயன்படுத்துமாறும் அதற்கான மருந்துகளையும் வசதிகளையும் அவசரமாக செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.
அதேவேளை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலிருந்து இரு வைத்திய நிபுணர்கள்,தாதி உத்தியோகத்தர்களை அவசர சிகிச்சைக்கு பயன்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் மேலும் குறிப்பிட்டார்.
அத்தோடு கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கி வரும் அணைத்து பாடசாலை சூழல்களிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் முகமாக கொழும்பு டெங்கு ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளை வலயக் கல்வி பணிப்பாளருடன் சந்திப்பும் இடம் பெற்றுள்ளன என்றார்.
16 minute ago
20 minute ago
33 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
20 minute ago
33 minute ago
48 minute ago