Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
அப்துல்சலாம் யாசீம் / 2018 ஏப்ரல் 19 , பி.ப. 02:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் அழைப்பின் பேரில், இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தைச்சேர்ந்த எம்.சீ.ஆர்.பவுண்டேசன் அமைப்பைச்சேர்ந்த திரு.ஆதித்யா ரெட்டி இன்று (19) திருகோணமலைக்கு விஜயம் செய்தார்.
எம்.சீ.ஆர்.அமைப்பானது, சர்வதேச ரீயில் உல்லாச பிரயாண மற்றும் விவசாயத்துறைகளிளான முதலீட்டாளர்களின் ஒரு அமைப்பாகும்.இவ்விஜயத்தினையடுத்து ஆளுநரை அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.
இக்கலந்துரையாடலின் போது, கிழக்கு மாகாணத்தின் விவசாய உல்லாச பிரயாணத்துறையின் அபிவிருத்திக்கு தெலுங்கானா மாநிலத்தின் தொழில்நுட்ப அறிவு பறிமாற்றத்தினையும், முதலீடுகளையும் கிழக்கு மாகாணம் எதிர்பார்ப்பதாக ஆளுநர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.
விவசாயத்துறையில், நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி விவசாய உற்பத்திகளுக்கான பெறுமதியினை அதிகரிக்கும் செயற்பாட்டினை மேற்கொண்டு, சர்வதேச சந்தைகளில் இப்பொருட்களை சந்தைப்படுத்துவதற்குறிய தந்துரோபாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்தி பணியகத்தின் தலைவர், கிழக்கு மாகாண அரச திணைக்களங்களின் செயலாளர்கள், கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச்செயலாளர் மற்றும் ஊடக செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
48 minute ago
1 hours ago
2 hours ago