2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ஆளுநர் - ஆயர் சந்திப்பு

Editorial   / 2019 ஏப்ரல் 04 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல் சலாம் யாசீம், எப்.முபாரக்

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கும் திருகோணமலை ஆயர்  கலாநிதி வண. அருட்தந்தை நொய்ல் இமானுவேல்லுக்குமிடையிலான சந்திப்பு, திருகோணமலையில் உள்ள ஆயர் இல்லத்தில் நேற்று (03) இடம்பெற்றது.

இதன்போது கத்தோலிக்க சமயம், கிறிஸ்தவ சமயம், கிறிஸ்தவ நாகரீகம் போன்ற பாடங்களுக்கு பட்டதாரி பயிலுநர்களையும் ஆசிரியர் உதவியாளர்களையும் நியமிப்பதற்கு விண்ணப்பங்கள் கோரப்படவில்லையென, ஆளுநரின் கவனத்துக்கு ஆயர் கொண்டுவந்தார்.

இதனையடுத்து உடனடியாக விண்ணப்பங்களைக் கோருமாறு, மாகாணக் கல்வி அமைச்சுக்கு, ஆளுநர் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .