2026 மார்ச் 19, வியாழக்கிழமை

ஆள் மாறியவருக்கு விளக்கமறியல்

எப். முபாரக்   / 2018 ஜனவரி 15 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில், சாரதிக்குப் பதிலாக கிண்ணியா பொலிஸ் நிலையத்துக்கு சமுகம் அளித்த வேறு ஒரு நபரை,  இம்மாதம் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை பதில் நீதவான் சுபாஷினி சித்திரவேல் உத்தரவிட்டார்.

கல்மெட்டியாவ, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கிண்ணியா, தம்பலகாமத்தில் கடந்த 12ஆம் திகதி இடம்பெற்ற மேற்படி விபத்தில், ஒருவர் படுகாயமடைந்த நிலையில், கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .