Gavitha / 2016 பெப்ரவரி 28 , மு.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ்
திருகோணமலை, கிண்ணியா கல்வி வலயப் பாடசாலைகளில், 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட வருடாந்த ஆசிரியர் இடமாற்றதை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.அகமட் லெப்பை சகல அதிபர்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து ஞாயிற்றுக்கிழமை (28) அவர் சகல அதிபர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டள்ளதாவது,
'சில பாடசாலைகளில் மேலதிகமாக உள்ள ஆசிரியர்களை இனங்கண்டு, ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ள பாடசாலைகளுக்கு, இடமாற்ற சபையினால் வருடாந்த இடமாற்றம் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால் இன்று வரையும் சில ஆசிரியர்கள் தங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட பாடசாலைகளில் கடமையேற்காமல் தொடர்ந்து அதே பாடசாலையில் கடமையாற்றி வருவதாக எமக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடமாற்றம் பெற்றும் அதே பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளம் இடைநிறுத்தப்படவுள்ளதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இடமாற்றம் வழங்கப்பட்ட ஆசிரியர்களை, தங்களது பாடசாலைகளில் கடமையேற்பதற்கு அந்தந்த பாடசாலை அதிபர்கள் உரிய ஒழுங்குகளை செய்யத் தவறும் பட்சத்தில், அதிபர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறியத்தருவதாகவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago