Freelancer / 2021 டிசெம்பர் 28 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் நிலவும் கடும் நெருக்கடி காரணமாக அந்த வைத்தியசாலையை வேறு இடத்தில் அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, வைத்தியசாலையை ´சத்தாபுர´ பிரதேசத்திற்கு மாற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வைத்தியசாலை வளாகத்தில் போதிய வசதி இல்லாமையினாலும், கடல் எல்லையில் அமைந்திருப்பதாலும் பல பிரச்சினைகள் உருவாகியுள்ளன.
இதுதொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று (27) சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, நிர்மாணப் பணிகளை 3 கட்டங்களின் கீழ் விரைவில் ஆரம்பிக்குமாறு அமைச்சர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.
23 minute ago
43 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
43 minute ago
51 minute ago
1 hours ago