அப்துல்சலாம் யாசீம் / 2020 மார்ச் 10 , பி.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலி நாட்டைச் சேர்ந்த இருவர், காய்ச்சல் காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இருவரும், இன்று (10) நண்பகல் 12.30 மணியளவில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் எனவும் அவர்கள் இருவரையும், தனியான அறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இவர்களைப் பரிசோதிப்பதற்காக, விஷேட வைத்திய நிபுணர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.
35 மற்றும் 43 வயதுடைய இருவரே, இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .