அப்துல்சலாம் யாசீம் / 2019 பெப்ரவரி 11 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, புல்மோட்டை கடற்பரப்பில், இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ், இந்திய மீனவர்கள் ஏழு பேரைக் கைதுசெய்துள்ளதாக, துறைமுகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்ட இம்மீனவர்கள், இந்தியா, டாடாநகர், நாகபட்டினம் பகுதியைச் சேர்ந்த 17 வயதுக்கும் 41 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை, திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்த துறைமுகப் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago