2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

இந்துகுருமார் சங்கத்தால் உதவி

Editorial   / 2020 ஜூன் 29 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

மூதூர் பிரதேச இந்து குருமார் சங்கத்தின் ஏற்பாட்டில், மூதூர் சஹாயபுரம் மாணிக்க விநாயகர் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்வு, சங்கத்தின் தலைவர் சிவசிறி இ.பாஸ்கரன் குருக்கலின் தலைமையில்  நேற்று (28) நடைபெற்றது.

இதன்போது, நீண்ட தூரம் கால்நடையாக பாடசாலை செல்லும்  வறிய குடும்பத்தைச் சேர்ந்த இரு  மாணவர்களுக்கான இலவச சைக்கிள்கள், மாணவர்களுக்கான அப்பியாச கொப்பிகள், அன்னதானம் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டன.

மூதூர் பிரதேச இந்து குருமார் சங்கமானது, மூதூரில் உள்ள வறிய குடும்பங்களை இணங்கண்டு, தனவந்தர்களின் உதவியுடன், பல சமூக நலச் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X