Editorial / 2018 ஜனவரி 23 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம், ஒலுமுதீன் கியாஸ், ஏ.ஆர்.எம்.றிபாஸ்
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடொன்றில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், இனந்தெரியாத விசமிகளால் இன்று (23) அதிகாலை 1.15 மணியளவில் தீ வைக்கப்பட்டு, நாசமாக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிண்ணியா, 5 ஆம் வட்டாரத்தில் முகம்மது றம்ஸான் எனும் ஆசிரியருக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிளே, இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஆசிரியர் விவரிக்கையில்,
நித்திரையில் இருந்த வேளை, தீப்பற்றி எறியூம் வாசனை வருவதையிட்டு, திடீரென்று எழுந்து வெளியில் வந்த போது, மோட்டார் சைக்கிளின் பின்பகுதி எரிந்துகொண்டிருந்தது. இதனையடுத்து தீயை அனைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், இருவர் முகத்தை மூடி மறைத்து வந்து தனது மோட்டார் சைக்கிளுக்கு தீயிட்டுக் கொழுத்தியுள்ளதாகவும் இது தொடர்பான காணொளி தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள சி.சி.டி.வி கமெராவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆசிரியர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை, கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகிறனர்.
16 minute ago
19 minute ago
33 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
19 minute ago
33 minute ago
1 hours ago