2025 மே 16, வெள்ளிக்கிழமை

இரு உயிர்களை காவுகொண்டது டெங்கு

Kogilavani   / 2017 மார்ச் 12 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத், ஒலுமுதீன் கியாஸ், அப்துல்சலாம் யாசீம்

டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இருவர், இன்று (12) உயிரிழந்துள்ளமையுடன் கிண்ணியாவில் இதுவரை டெங்குக் காய்ச்சலினால் உயிரிழந்தோர் தொகை 8ஆக அதிகரித்துள்ளது.

திருகோணமலை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த, கிண்ணியா, 4ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த பாத்திமா சனா (வயது 6) என்ற சிறுமியும் கிண்ணியா மாஞ்சோலைச்சேனையைச் சேர்ந்த பாத்திமா றிஸ்வானா (வயது 38) என்ற நான்கு பிள்ளைகளின் தாயுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

டெங்குக் காய்ச்சலினால், கிண்ணியாவில் மூன்று ஆண்களும் ஐந்து பெண்களும் இதுவரை உயிரிழந்துள்ளனர். தற்போது தோன்றியுள்ள இவ்விறப்புகளால் பிரதேச மக்கள் பீதியடைந்துள்ளனர்.

ஜனவரி 1ஆம் திகதியிலிருந்து மார்ச் 11ஆம் திகதி வரையும் 988 பேர், டெங்குத் தாக்கத்துக்குள்ளாகி கிண்ணியா தள வைத்தியசாலையில் சிசிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றும் சிகிச்சைக்காக வருகின்றவர்களின் தொகை நாளாந்தம் அதிகரித்துக் கொண்டு வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கிண்ணியா பிரதேசத்தில் 1,150 பேர் இதுவரைக்கும் பாதிக்கப்பட்டுள்ளனரென, கிண்ணியா சுகாதார சேவைகள் அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .