2025 மே 20, செவ்வாய்க்கிழமை

இரு விபத்துகளில் இருவர் காயம்

Princiya Dixci   / 2016 ஜூன் 03 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

- பதுர்தீன் சியானா

திருகோணமலையில் இன்று வெள்ளிக்கிழமை (03) காலை இடம்பெற்ற விபத்துக்களில் இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்கோப் பகுதியில் மஞ்சல் கோட்டில் வீதியை கடக்க முற்பட்டபோது, வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் ஆண்டாங்குளம் - லயணல் மாவத்தையைச் சேர்ந்த எச்.லங்கா ராணி (41 வயது) என்ற பெண் படுகாயமடைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிள் சாரதி, தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கன்னியா – பீலியடிப் பகுதியில் உழவு இயந்திரம் வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் திருகோணமலை - விகாரை வீதியில் வசித்து வரும் கே.சிவராஷா (56 வயது)  பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்துக்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X