Editorial / 2019 ஏப்ரல் 30 , பி.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை கந்தளாய் பகுதியில், தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் மொஹமட் காஸிம் மொஹமட் சஹ்ரான் காசிம் உரையாற்றிய கானொளிகள் அடங்கிய இறுவட்டுகளை, தன்வசம் வைத்திருந்த நபர் ஒருவரை, கந்தளாய் பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர்.
கந்தளாய், பேராறு பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அந்நபரிடமிருந்து 16 இறுவட்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
கந்தளாய் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து, கந்தளாய் பிரதேசத்தில், நேற்று முன்தினம் திடிர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். வீடொன்றில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே, குறித்த நபரை இறுவட்டுகளுடன் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
3 hours ago
3 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago
5 hours ago