2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

இலங்கைத்துறை முகத்துவாரத்தில் சுனாமி ஒத்திகை

Thipaan   / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதூர்தீன் சியானா

சர்வதேச சுனாமி ஒத்திகை நிகழ்வின் திருகோணமலை மாவட்ட நிகழ்வு, வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலங்கைத்துறை முகத்துவாரம் கிராம சேவையாளர் பிரிவில் இன்று (07) நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழுவின் மாவட்ட உதவிப்பணிப்பாளர் விராஜ் திஸாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட ஒத்திகையின் போது, சுனாமி கோபுரத்திலிருந்து எச்சரிக்கை ஓசை கேட்டவுடன் மக்கள் எவ்வாறு செயற்பட வேண்டுமெனவும் அங்கு விழிப்புணர்வாகக் காண்பிக்கப்பட்டது.

இவ்வனர்த்தத்தின் போது, காயம் மற்றும் விபத்துக்களின் போது மக்களுக்கு எவ்வாறு இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் தொண்டு சேவைகளை வழங்குகின்றமை பற்றியும் மக்களுக்கு தெளிவூட்டப்பட்டது.

இதேவேளை, பாதிக்கப்பட்ட பின்னர் பிரதேச செயலக அதிகாரிகள் எவ்வாறு மக்களுடன் செயற்பட வேண்டும், செயற்படுகின்றார்கள் எனவும் மக்களுக்குத் தெளிவூட்டப்பட்டது.

இந்நிகழ்வில், வெருகல் பிரதேச செயலாளர் எம்.தயாபரன், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டொக்டர் ரவிச்சந்திரன் கந்தளாய் பிரதேசத்துக்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ஹேமசிறி, சேருநுவர பொலிஸ் பொறுப்பதிகாரி வசந்த குமார மற்றும் முப்படைகளின் உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .