Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 மே 07 , மு.ப. 07:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக், வடிவேல் சக்திவேல்,வா.கிருஸ்ணா
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் மலேசியா சர்வதேச வியாபார கைத்தொழில் அமைச்சர் டொக்டர். முஸ்தபா முகம்மட் அவர்களுக்கும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலின் போது, இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையிலான வியாபார உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகவும் இலங்கையின் பல்வேறுபட்ட முதலீடுகளில் கைத்தொழில் முயற்சிகளை உருவாக்குவதில் மலேசியாவினுடைய பங்களிப்பு கோருவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
ஏற்கெனவே, இலங்கையினுடைய தொலைத்தொடர்பு துறையில் மலேசியாவின் டயலொக் நிறுவனம் ஆற்றுகின்ற பாரிய பங்களிப்பை இதன்போது பாராட்டிய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், எதிர்காலத்தில் கைத்தொழில் துறையில் வாகன உற்பத்தி செய்தல் உட்பட பல்வேறுபட்ட கைத்தொழில் துறைகளுக்கு மலேசியாவின் ஆதரவு, அனுபவத்தை இலங்கைக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.
இக்கலந்துரையாடலில், மலேசிய சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பான பணிப்பாளர் நாயகம், மிடா நிறுவனத்தின் தலைவர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
9 minute ago
25 minute ago
27 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
25 minute ago
27 minute ago
53 minute ago