Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஓகஸ்ட் 27 , பி.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க கடற்படை உறுப்பினர்களினால் திருகோணமலைத் துறைமுகத்தில் வைத்து இலங்கை கடற்படையினருக்கு உயிர்பாதுகாப்பு கலைகள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளன.
இந்து - பசுபிக் வலயத்தின் ஆசிய மனிதாபினமானச் செயற்பாடுகளின் போது உதவிகளை பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே இந்த பயிற்சிகள் வழங்கபட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க பிரதித்து தூதுவர் ரொபட் ஹில்டன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை - அமெரிக்க நட்புறவை பலப்படுத்திக்கொள்ளும் நோக்கிலேயே யூ.எஸ்.எஸ் என்கரேஜ் கப்பலில் வருகை போர் கப்பல் திருகோணமலைத் துறைமுகத்துக்கு வருகைத்தந்துள்ளது.
6 கவச வாகனங்கள், போர் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும் 6 ஹெலிகொப்டர்கள் மற்றும் போர் ஆயுதங்கள் சகிதம் வந்துள்ள இக்கப்பல் 25000 டொன் நிறையுடையது. இதனால் 22 கடல் அடிகள் வேகத்தில் பயணிக் முடியும்.
இந்த கப்பலில் வந்த படைவீரர்கள் வழங்கியுள்ள பயிற்சியால் இந்து - பசுபிக் வலயத்தில் அவசர மனிதாபிமான உதவிச் செயற்பாடுகளை பலப்படுத்த முடியும் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், இந்து சமுத்திரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இலங்கை அமைந்துள்ளமையால் அமெரிக்கா கூட்டு படைகளின் மனிதாபிமான உதவிச் செயற்பாடுகளுக்கு விரைந்து உதவிகளை பெற்றுக்கொள்ளக்கூடியாதாக அமையும் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
05 May 2025