2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

இலவச குடிநீரை பெற்றுக்கொள்ள காசோலைகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2016 ஜூன் 13 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட், ஏ.எம்.ஏ.பரீத், எப்.முபாரக்

திருகோணமலை, கிண்ணியா பிரதேசத்தில் 15 குடும்பங்களுக்கான இலவச குடிநீர் இணைப்பை பெற்றுக்கொள்வதற்கான காசோலைகள், ஞாயிற்றுக்கிழமை(12) வழங்கப்பட்டது.

அனைவருக்கும் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்கும் நோக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூபால் ஆரம்பிக்கப்பட்ட 'ஊடநயn 'Clean Drinking Water to All' செயற்றிட்டத்தின் கீழ், இலவச குடிநீர்  இணைப்புகள் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன.

இச்செயற்றிட்டத்தின் கீழ், திருகோணமலை மாவட்டத்தில் சுத்தமான குடிநீர் பெற கஷ்டப்படும் குடும்பங்களுக்கு இலவச கிணறு, குழாய் கிணறு, குடிநீர் இணைப்பு வழங்கப்படுகிறது.

எதிர்காலத்தில், இத்திட்டத்தை கிழக்கு மாகாணம் முழுவதும் விஸ்தரிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X