Princiya Dixci / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை பொது வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவும் லயன்ஸ் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இலவச கண் பரிசோதனை முகாம், மொறவெவ பிரதேச சபை மண்டபத்தில் எதிர்வரும் 24ஆம் திகதி காலை 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 2.00 மணி வரை நடைபெறவுள்ளது.
மொறவெவ பிரதேசத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்கள், கண் நோய்களினால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்ததையடுத்து இவ்வாறான வேலைத்திட்டங்களைத் தாம் ஆரம்பித்துள்ளதாக மொறவெவ பிரதேச சபையின் செயலாளர் ஐ. ஜூட் தெரிவித்தார்.
குறித்த தினத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருகை தந்து, கண் சத்திர சிகிச்சை நிபுணர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற இலவச வைத்திய முகாமில் பங்கு பற்றி, இலவச மூக்கு கண்ணாடிகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
32 minute ago
37 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
37 minute ago
48 minute ago