Princiya Dixci / 2015 டிசெம்பர் 25 , மு.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை பொது வைத்தியசாலை கண் சிகிச்சைப் பிரிவு, திருமலை நகர லயன்ஸ் கழகம் மற்றும் மொறவெவ பிரதேச சபை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இலவச கண் பரிசோதனை முகாமும் மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வும், மொறவெவ பிரதேச சபை மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை (24) நடைபெற்றது.
இப்பரிசோதனை முகாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு கண்களை பரிசோதனை செய்ததுடன், 439 பேருக்கு இலவச மூக்குக்கண்ணாடியும் வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன், 53 நபர்களுக்கு நீரிழிவு நோய் காணப்படுகின்றதா என சோதனையிட்டதுடன், அதில் 10 நீரிழிவு நோயாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டதாகவும் திருகோணமலை பொது வைத்தியசாலையின் வைத்தியர் திருமதி திருச்செல்வம் தெரிவித்தார்.
இதேவேளை கண்ணில் 53 பேருக்கு வெண்படலம் காணப்படுவதாகவும் அதற்கான சத்திர சிகிச்சைகளுக்கான திகதிகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார, பொது வைத்தியசாலையின் கண் சிகிச்சை பிரிவின் வைத்திய நிபுணர் ராஜபக்ஸ, திருமலை நகர லயன்ஸ் கழகத்தின் தலைவர் ஜேம்ஸ் சமதர், செயலாளர் பீ. உதயசங்கர், உறுப்பினர்களான கே.திருச்செல்வம் மற்றும் கலைச்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
32 minute ago
37 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
37 minute ago
48 minute ago