Freelancer / 2022 ஓகஸ்ட் 10 , பி.ப. 01:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தீஷான் அஹமட்)
சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள கட்டைபறிச்சான் இறால் பாலத்தின் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் தோப்பூர் - சின்னக்குளம் பகுதியைச் சேர்ந்த தவகுமார் ரதுசன் ( வயது -18 ) உயிரிழந்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த சிறுவன் தனது நண்பர்களோடு இறால் பாலத்தில் குளித்துக் கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவருகிறது.
சம்பவ இடத்திற்கு திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜே.ஏ.நூருல்லா ஞாயிற்றுக்கிழமை மாலை சென்று பார்வையிட்டார்.

உயிரிழந்த சிறுவனின் சடலம் மீட்கப்பட்டு மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பின்னர் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நேற்று முன்தினம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் திடிர் மரண விசாரணை அதிகாரி குறிப்பிட்டார் .
மேலும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
42 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
7 hours ago