2025 மே 13, செவ்வாய்க்கிழமை

இளைஞர் குழு மோதல்; இருவர் காயம்

எப். முபாரக்   / 2017 நவம்பர் 22 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.

பாலையூற்று, திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 23, 21 வயதுடைய இரு இளைஞர்களே, இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரு இளைஞர் குழு, நேற்றிரவு (21) மதுபானம் அருந்தி விட்டு பழைய பிரச்சினையொன்றைப் பெரிதாக்கி மோதலில் ஈடுபட்டுள்ளனரென, உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X