2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

உடும்பு இறைச்சியுடன் ஒருவர் கைது

Princiya Dixci   / 2017 ஜனவரி 21 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

திருகோணமலை, அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 3 கிலோகிராம் உடும்பு இறைச்சியைத் தம்வசம் வைத்திருந்த நபரொருவரை, நேற்று வெள்ளிக்கிழமை (20) பிற்பகல் கைதுசெய்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தளாய், சீனியாலை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரையே கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர், வீட்டில் விற்பனைக்காக உடும்பு இறைச்சியை வைத்திருந்த நிலையிலே, பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டு உடும்பு இறைச்சியைக் கைப்பற்றியதுடன், சந்தேகநபரையும் கைதுசெய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபரை தடுத்து வைத்துள்ளதோடு, இன்று (21) கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X