2026 மார்ச் 23, திங்கட்கிழமை

உடும்பு இறைச்சி வைத்திருந்தவருக்குப் பிணை

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை, இரணக்கேணிப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை உடும்பு இறைச்சியுடன் கைதுசெய்யப்பட்ட நபரை, திருகோணமலை நீதிமன்ற நீதவான் கயான் மீ கஹகே முன்னிலையில் ஆஜர்படுத்திய வேளை பிணையில் செல்ல அனுமதியளித்த நீதவான், மார்ச் மாதம் 08ஆம் திகதி மீண்டும் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர், திருகோணமலை - இரணக் கேணி 02ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த தங்கவேலாயுதம் தர்மதாஸ் (வயது 32) எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் வளர்க்கும் நாயை வைத்துக்கொண்டு மிருகங்களை வேட்டையாடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து சோதனைகளை மேற்கொண்டபோதே உடுப்பு இறைச்சி கைப்பற்றப்பட்டது.

மீட்கப்பட்ட 1 கிலோ 500 கிராம் இறைச்சியையும் பொலிஸார் நீதிமன்றில் ஒப்படைத்தனர்.
விசாரணைகளை குச்சவெளிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .