2026 மார்ச் 23, திங்கட்கிழமை

உடற்பயிற்சியில் ஈடுபட்ட இராணுவ வீரர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 14 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா  

திருகோணமலை 22ஆவது இராணுவத் தலைமையகக் காரியாலயத்தில் கடமையாற்றி வந்த  லெப்டினல் கேணல் ஒருவர், சனிக்கிழமை (13) மாலை  உடற்பயிற்சியின் நிமித்தம் வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது திடீரென்று மயக்கமடைந்து விழுந்ததைத் தொடர்ந்து உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சாம்பல்தீவுப் பகுதியில் விழுந்த இவரை உடனடியாக நிலாவெளி கிராமிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுகொண்டிருந்தபோது உயிரிழந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

களுத்துறை, கட்டுகுருந்தக் பகுதியைச் சேர்ந்த ஜயந்த கஜவீர (வயது 46) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .