அப்துல்சலாம் யாசீம் / 2018 டிசெம்பர் 12 , பி.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
உணவு பாதுகாப்பு வாரத்தையொட்டி, திருகோணமலை மாவட்டத்தில் உணவு கையாளும் நிலையங்களில் விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பிராந்திய உணவு மருந்து பரிசோதனை பிரிவினர் தெரிவித்தனர்.
கடந்த 10ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 16ஆம் திகதி வரையான காலப்பகுதியில், உணவு பாதுகாப்பு வாரத்தையொட்டி, திருகோணமலை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் பீ.கயல்விழியின் வழி காட்டலின் கீழ், இச்சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் கோமரங்கடவல, வெருகல் போன்ற பிரதேசங்களில் அனைத்து உணவு கையாளும் நிறுவனங்களும் பரிசீலனை செய்யப்பட்டு, கடை உரிமையாளர்களுக்கு தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
அத்துடன், மாவட்டத்திலுள்ள அனைத்து ஹோட்டல்கள், நடமாடும் வீதிக் கடைகள், உணவு உற்பத்தி நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் உணவகங்களில் ஏதாவது குறைபாடுகள், பிரச்சினைகள் காணப்பட்டால் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்துக்கு அறிவிக்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
14 minute ago
19 minute ago
27 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
19 minute ago
27 minute ago
33 minute ago