2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

உபகரணம் வழங்கும் நிகழ்வு

Niroshini   / 2017 பெப்ரவரி 11 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

கந்தளாய் பிரதேச மீனவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மீனவர்களுக்கான உபகரணங்கள், இன்று வழங்கி வைக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்றூப் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், கைத்தொழில்  வர்த்தகதுறை அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவருமான ரிஷாட் பதியுத்தீன், கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய  அமைப்பாளர் டொக்டர் ஹில்மி மற்றும் கட்சியின் முக்கியஸ்தகர்கள் பலரும் கலந்துசிறப்பித்தனர்.

மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், இருபத்தைந்து பேருக்கு  சைக்கிள்கள் மற்றும் மீன் பெட்டிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X