2025 மே 17, சனிக்கிழமை

உரிமையாளர்கள் மூவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Thipaan   / 2016 நவம்பர் 08 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்                 

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில், பொது சுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, அசுத்தமான முறையில் உணவகங்களை வைத்திருந்த உரிமையாளர்கள் மூவருக்கு எதிராக, சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக கந்தளாய் பொது சுகாதார பரிசோதகர் நிமல் பண்டார தெரிவித்தார்.                                    

சில்லரைக் கடைகள், ஹோட்டல்கள் மற்றும் சிறிய உணவகங்கள் என நூற்றுக்கும் இடங்களில், நேற்றுத் திங்கட்கிழமை (07) சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது, மூன்று உணவகங்கள் அசுத்தமான முறையில் காணப்பட்டதாகவும் உணவகங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், சில்லரைக் கடைகள் நான்கில், காலாவதியான பிஸ்கட் வகைகளை விற்பனைக்காக வைத்திருந்ததைக் கண்டு பிடித்ததாகவும், சில்லரைக் கடை உரிமையாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்த அவர், இந்த சோதனை நடவடிக்கைகள் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.               

கடந்த காலங்களில் கந்தளாய் நகரில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது, சட்டநடவடிக்கை எடுக்கப்பட்ட 28 உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.             


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .