2025 மே 16, வெள்ளிக்கிழமை

உள்ளூராட்சி மன்ற செயலாளர்கள் இடமாற்றம்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 28 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்

 திருகோணமலை மாவட்டத்தில், நான்கு உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள், நாளை (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  

இதற்கமைவாக, கிண்ணியாவில் கடமையாற்றிய நகரசபை செயலாளர், தம்பலகமம் பிரதேச சபைக்கும் தம்பலகம் பிரதேச சபை செயலாளராகக் கடமையாற்றியவர், திருகோணமலை நகர சபைக்கும், கிண்ணியா பிரதேச சபைச் செயலாளர், கிண்ணியா நகர சபைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  

இதேவேளை, கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்தில், நிர்வாக உத்தியோகத்தராகக் கடமை புரிந்த எம்.ஜே.அஸ்வத்கான், கிண்ணியா பிரதேச சபையின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.  

கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு, மேற்படி இடமாற்றங்களைச் செய்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .