2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விடயத்தில் வெவ்வேறு செயற்பாடுகள்

Freelancer   / 2023 பெப்ரவரி 20 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் விடயத்தில், அரசாங்கம் வேறாகவும் தேர்தல் ஆணைக்குழு வேறாகவும் செயற்பட்டு, இரு தரப்புக்களுக்கிடையில் ஒரு போராட்டம் போல தெரிகிறது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

தம்பலகாமம் - முள்ளிப்பொத்தானை பகுதியில் நேற்று (19) மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், “தேர்தலை பிற்போடுவது ஜனநாயக விரோதமாகும். உடனடியாக தேர்தலை நடத்த அரசாங்கம் முன்வர வேண்டும்.

“மக்களின் எதிர்பார்ப்பும் தேர்தலை நடத்த வேண்டும். பணம் இல்லை என்று சாட்டுப் போக்கு சொல்லி ஏமாற்றாமல், மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக இந்தத் தேர்தல் மூலம் சந்தர்ப்பம் மக்களுக்கு  வழங்கப்பட வேண்டும்” என்றார். (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .