2025 மே 13, செவ்வாய்க்கிழமை

உள்ளூராட்சித் தேர்தலில் தனித்தா? கூட்டிணைந்தா?

Editorial   / 2017 நவம்பர் 05 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட், ஹஸ்பர் ஏ ஹலீம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் திருகோணமலை மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடுவதா அல்லது பிரதான கட்சிகளுடன் கூட்டிணைந்து போட்டியிடுவதா என்பது குறித்து, கட்சியின் முக்கியஸ்தர்களின் கருத்துகளை கேட்டறியும் கலந்துரையாடல், கட்சியின் மாவட்ட காரியாலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தலைமையில் நேற்று (04) நடைபெற்றது.

இதன்போது, கட்சியின் முக்கியஸ்தர்களால் தனித்தும் கூட்டிணைந்தும் போட்டியிடுவதிலும் உள்ள சாதக பாதங்கள் தொடர்பான கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

இதில் அதிகமானோர், தனித்துப் போட்டியிடுவதில் அதிகமான சாதகம் இருப்பதாக கருத்துகள் முன்வைத்ததாகவும் இது விடயம் தொடர்பில் கட்சியின் உயர்மட்டக் குழு மிக விரைவில் கூடி, நல்லதொரு முடிவை எடுக்குமெனவும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான சட்டத்தரணி ஜே.எம்.லாஹீர், ஆர்.எம்.அன்வர் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X