Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 26 , பி.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஆர்.எம்.றிபாஸ், ஒலுமுதீன் கியாஸ்
இளைஞர் விவகார அமைச்சு, தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றின் அனுசரணையுடன், கிண்ணியா பிரதேச செயலகம் ஏற்பாடு செய்துள்ள உள்ளூர் உற்பத்திப் பொருள்களின் கண்காட்சி, கிண்ணியா பிரதேச செயலக வளாகத்தில், இன்று (26) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சிறு கைத்தொழில் முயற்சியளர் அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் பிரலநாவன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கண்காட்சி, நாளையும் (27) நடைபெறவுள்ளது.
கண்காட்சிக்கு பிரதம விருந்தினராக திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அருந்தவராஜா , கிண்ணியா பிரதேச செயலாளர் முஹம்மது கனி, கிண்ணியா பிரதேச சபைத் தவிசாளர் எம்.எச்.சனூஸ் ஆகியோர் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தனர்.
இக்கண்காட்சியில், உள்ளூர் உற்பத்திப் பொருள்கள் காட்சிபடுத்தப்படுவதோடு, அவை விற்பனையும் செய்யப்படுகின்றன.
பொதுமக்கள், இக்கண்காட்சியை இலவசமாகப் பார்வையிடுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
41 minute ago
48 minute ago
2 hours ago