Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 ஒக்டோபர் 09 , பி.ப. 02:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஷான் அஹமட்
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள கொக்கட்டி பகுதியிலுள்ள பண்ட் வீதியை விட்டுவிலகி, உழவு இயந்திரமொன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இன்னுமொருவர் காயமடைந்துள்ளதாக சம்பூர் பொலிஸார் குறிப்பிட்டனர் .
இன்று (09) ஞாயிற்றுக்கிழமை காலை இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக சம்பூர் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் சம்பூர் - கடற்கரைச்சேனை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிறிபால கஜன் (வயது 32) உயிரிழந்துள்ளார்.
வயல் உழவு வேலை செய்வதற்காக சாரதியும், உதவியாளரும் உழவு இயந்திரத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது உழவு இயந்திரமானது பண்ட் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்ததிலே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
உயிரிழந்தவரின் சடலம் மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் காயமடைந்த மற்றையவர் அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சம்பூர் பொலிஸார் குறிப்பிட்டனர்.
குறித்த இடத்திற்கு சம்பூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வருகை தந்து பார்வையிட்டார்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago