Niroshini / 2015 டிசெம்பர் 17 , பி.ப. 02:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
ஊடகவியலாளர்களின் திறன்களை விருத்தி செய்யும் வகையில் வெகுசன ஊடக அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அசி தெசி ஊடக புலமைப் பரிசில் நிகழ்ச்சித் திட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கும் வைபவம் நாளை வெள்ளிக்கிழமை அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தலைமையில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில், ஊடகத்துறை பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
முன்னேற்றகரமான வெகுசன ஊடக கலாசாரத்தை உருவாக்கும் நோக்குடன் ஊடகவியலாளர்களின் அறிவு, தொழில்நுட்பம், மனப்பாங்கு போன்ற அறிவுத்துறை விருத்திக்கென அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள் போன்றவற்றில் கற்கை நெறிகளை மேற்கொள்ளும் பொருட்டு ஊடக அமைச்சினால் இப்புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது.
கடந்த மே மாதம் நாடளாவிய ரீதியில் விண்ணப்பித்த ஊடகவியலாளர்கள் மத்தியில் நடத்தப்பட்ட மேற்படி புலமைப்பரிசிலுக்கான நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஊடகவியலாளர்களுக்கு நாளை புலமைப் பரிசில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
35 minute ago
40 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
40 minute ago
51 minute ago