2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

Princiya Dixci   / 2016 ஜூன் 04 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா, வடமலை ராஜ்குமார்

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவிடன் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் எக்டெட் நிறுவனம் போன்ற அமைப்புக்கள் ஒன்றினைந்து கிழக்கு மாகாணத்திலுள்ள தெரிவுசெய்யப்பட்ட  40 ஊடகவியலாளர்களுக்கான உரிமைகள் மற்றும் சுதந்திரம் தொடர்பான செயலமர்வினை, இன்று சனிக்கிழமை (04) ஆரம்பித்தன.

எக்டெட் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் எஸ்.சுதர்சன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் செங்கலடி பிரதேச செயலாளர் யூ.உதய சிறிதர் மற்றும் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.டி.கே.ஹெட்டியாராய்ச்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.

கருத்துச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் எவ்வாறு எமது நாட்டில் காணப்படுகின்றது? சட்டங்கள் ஏன்? என்பது பற்றிய விடயங்களை கிழக்குப் பல்கலைகழக சமூகவியல் விரிவுரையாளர் பகீரதி மோசஸ் இதில் கலந்துகொண்டு தெளிவுபடுத்தினார்.

இச்செயலமர்வு, இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X