Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஜூலை 09 , மு.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொன் ஆனந்தம்
'காளிமுத்து என்பவரின் கடைக்கு வெங்காயம் வாங்குவதற்காகச் சென்ற போது, அங்கு கடைக்குள் அகப்பட்ட பலரையும் இராணுவத்தினர் சுட்டனர். ஆனால், குமார என்றவொரு இராணுவ வீரர், என்னை மாத்திரம் கையசைத்து அழைத்து அங்கிருந்து தப்பிச்செல்லுமாறு சைகை காட்டினார். என்னைத்தவிற மற்றையவர்களை சுட்டனர்' என்று ஜேசுதாசன் லெட்சுமி (வயது 49) என்பவர் சாட்சியமளித்தார்.
திருகோணமலை, கிளிவெட்டிப் பிரதேசத்தில் 1996ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ஆம் திகதியன்று பொதுமக்கள் 26 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகின்றது.
ஜூரிகள் சபையின் முன்னிலை, ஒன்பதாவது நாளாக நேற்று வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்ற விசாரணையின்போதே அவர் மேற்கண்டவாறு சாட்சியமளித்தார்.
நேற்றைய விசாரணைகளுக்காக நான்கு பேர் சாட்சியங்களுக்காக வரவழைக்கப்பட்டிருந்தனர்.
இவருடன் சிற்றம்பலம் கோணேஸ்வரன் (27), நாகராசா சுதாகரன் (28), இராசையா நாகேஸ்வரி (66) என்பவர்களும் சாட்சியமளித்தனர். இனிமேல் நடைபெறவுள்ள விசாரணைகளில், சம்பந்தப்பட்ட வைத்தியர்கள், சிவில் கடமையில் அப்போது இருந்த அதிகாரிகளும் எஞ்சிய சாட்சிகளும் அழைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதுவரை 36 பேர் சாட்சியங்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago