Editorial / 2019 மார்ச் 22 , பி.ப. 02:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
சிறைச்சாலைகள் திணைக்களத்தால், புனர்வாழ் அதிகாரிகளுக்கான எச்.ஐ.வி தொடர்பான செயலமர்வு, இன்று (22) சிறைச்சாலைகள் சீர்திருத்த பயிற்சி பாடசாலையில், சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.கனிஸ்தீன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு எச்.ஐ.வி எயிட்ஸ் தொடர்பான தெளிவினை வழங்க வேண்டும், கைதிகளுக்கு எயிட்ஸ் தொற்று மூலம் ஏற்படும் நோய்கள் பற்றியும் தெளிவுபடுத்தி கைதிகளை விழிப்புணர்வூட்ட வேண்டும் போன்ற பயிற்சிகளும் தெளிவுகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் டி.எம்.ஜே.எம்.தென்னக்கோன், சிறைச்சாலைகள் ஆணையாளர் (பொருட்கள் விநியோகம்) சந்தன ஏக்கநாயக்க, சிறைச்சாலை அத்தியட்சகர் சமந்த அழகக்கோன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்கள்.
11 minute ago
25 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
25 minute ago
1 hours ago
1 hours ago