Freelancer / 2022 ஜூன் 21 , பி.ப. 01:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை மாவட்டம், கந்தளாய் பிரதேசத்தில் எரிபொருள் வழங்க கோரி மக்கள் இன்று (21) போராட்டத்தில் ஈடுபட்டார்கள் .
கந்தளாய் 91 ஆம் கட்டைப்பகுதியின் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த வேளையில், எரிபொருள் இல்லையென்று திடீரென கூறியதையடுத்து, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இதனால் வீதியால் சென்ற எரிபொருள் பௌசரை மறித்து நகர விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
பின்பு எரிபொருள் உரிமையாளருக்கும், பொதுமக்களுக்கும் முறுகல் நிலை ஏற்பட்டதால், சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸாரும், இராணுவத்தினரும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததையடுத்து, பின்பு எரிபொருள் வழங்கப்பட்டன.

21 minute ago
41 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
41 minute ago
46 minute ago