Freelancer / 2022 ஜூன் 09 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட்
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவின் ஜாயா நகர் பிரதேசத்தில் வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கபீப் முஹம்மட் இப்றாஹீம் வயது (42) என்பவர் மூதூரில் சமையல் எரிவாயுவை பெற்றுக் கொள்ளும் நோக்கில், மேற்கொள்ளப்பட்ட மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்ட நிலையில், மாரடைப்பு காரணமாக கடந்த (01) ஆம் திகதி மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணம் அடைந்தார்.

மர்ஹும் இப்ராஹிமின் தற்போதைய குடும்ப நிலைமைகளைக் கருத்திற்கொண்டு இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் பல்வேறு மனிதாபிமான உதவிகளையும் வழங்கி வரும் தியாகி அறக்கொடை நிறுவனம் , மர்ஹும் இப்ராஹிமின் குடும்பத்திற்கும் உதவ முன்வந்தது.
இதற்கமைவாக, இன ஐக்கியத்திற்கும் , சமூக நலனுக்குமான அமைப்பின் ஏற்பாட்டில், (06) ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மர்ஹும் கபீப் , முஹம்மட் இப்றாஹீம் அவர்களின் குடும்ப மற்றும் பிள்ளைகளின் பராமரிப்பு செலவுக்காக ரூபாய் ஐந்து லட்சம் ரூபாய் உதவித்தொகை அந் நிறுவனத்தின்
கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எல்.எம்.என். நைறூஸ் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக், மூதூர் அனைத்துப் பள்ளிவாசல் தலைவர் சாஹூல் கமீது தஸ்ரிக் (மௌலவி) உள்ளிட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பிரதேச செயலக அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
9 minute ago
21 minute ago
26 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
21 minute ago
26 minute ago
34 minute ago