2025 ஜூலை 31, வியாழக்கிழமை

எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் விடுதலை

Princiya Dixci   / 2016 ஜூலை 06 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்
திருகோணமலை, சம்பூர் கடற்பரப்பில் அரச சட்ட விதிமுறைகளை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட 13 மீனவர்களுக்கும் 75 ஆயிரம் ரூபாய் சரீரப்பிணையில் விடுதலை செய்யுமாறும் எதிர்வரும் 20 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும், மூதூர் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.என்.ரிஸ்வான் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வழக்கானது, திங்கட்கிழமை (04) மூதூர் நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர்கள், குறித்த தினத்தன்று, உரிய கடற்பரப்பின் எல்லையை மீறி 07 கிலோமீற்றர் தொலைவுக்குச் சென்று மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றசாட்டின் பெயரில், திருகோணமலை கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .