2026 மார்ச் 23, திங்கட்கிழமை

ஏழு வயது சிறுமி துஷ்பிரயோகம்; ஒருவருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக் 

திருகோணமலை, ஜயந்திபுர பகுதியில் ஏழு வயது சிறுமியொருவரை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய ஒருவரை, இம்மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் ருவான் திஸாநாயக்க, நேற்று திங்கட்கிழமை (21)உத்தரவிட்டார்.  

ஜயந்திபுர, வான்எல, பகுதியைச் சேர்ந்த எம்.விஜயரத்தின (வயது 53) என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜயந்திர பகுதியில் சிறுமியின் வீட்டின் அருகிலே சந்தேகநபர் தனிமையில் வசித்து வந்துள்ளதாகவும் கடைக்குச் சென்ற சிறுமியை அழைத்துச் சென்று, குறித்த சந்தேகநபர்  துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.      
 
சிறுமியின் பெற்றோர், வழங்கிய பொலிஸ் முறைப்பாட்டையடுத்து சந்தே நபரை, ஞாயிற்றுக்கிழமை (20) மாலை சூரியபுர பொலிஸார் கைது செய்தனர். 

மருத்துவ பரிசோதனைக்காக சிறுமி, கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
சூரியபுர பொலிஸார், கந்தளாய் நீதிவான் நீதிமன்றில் சந்தேகநபரை ஆஜர்படுத்திய போது, விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். 

இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை சூரியபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .