Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
எப். முபாரக் / 2019 மார்ச் 11 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
விபத்தில் சேதமடைந்த அரசாங்கத்துக்குச் சொந்தமான ஜீப், கந்தளாய் அக்போபுர பகுதியிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரொருவரின் வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. அந்த வாகனத்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளது.
விபத்தொன்றில் சேதமடைந்த வாகனமொன்று குறித்த வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக, அக்போபுர பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. அதனடிப்படையிலேயே சனிக்கிழமை (09) அந்த ஜீப் மீட்கப்பட்டது.
கந்தளாய் – சீனிபுர பகுதியில் இந்த ஜீப், கடந்த 26ஆம் திகதி, மாடொன்றின் மீது மோதியுள்ளது. அதுதொடர்பில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.
2006 இல் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வாகனத்தை வெளிவிவகார அமைச்சுக்கு சொந்தமானதெனவும் அந்த வாகனம் மற்றுமோர் அமைச்சுக்கு கைமாற்றப்பட்டுள்ளதெனத் தெரிவித்த அக்போபுர பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகத் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
40 minute ago
3 hours ago
3 hours ago